இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தொண்டர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை காட்டுகிறது. அந்த கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருக்க, அதிக நெருக்கடியால் தொண்டர்கள் அவர்களை நெரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு இருந்த மற்றொரு த.வெ.க தொண்டர், நெருக்கியவர்களை முதுகில் குத்தி தள்ள வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. இது வாக்குவாதத்தை ஏற்படுத்தி, பரபரப்பான சூழலை உருவாக்கியது.
இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த பலரும், இத்தகைய கூட்ட நெரிசலுக்கு குழந்தைகளை ஏன் அழைத்து வர வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் தள்ளுமுள்ளில் சிக்கி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, பொறுப்பான ஏற்பாடுகள் தேவை என்கிறது பொதுமக்களின் கருத்து.
