மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட உள்ளூர் ரயிலின் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஒரு ஆண் உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஏரி பயணிகளுக்கு அதிர்ச்சளித்துள்ளார். அவரைப் பார்த்த பெண்கள் கூச்சலிட்டு டிக்கெட் பரிசோதகரை வரவழைத்தனர். பின்னர் அவர் நிர்வாணமாக பயணித்த அந்த நபரை ரயிலில் இருந்து இறக்கி விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அந்த நபரை கைது செய்த நிலையில் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.