சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது செல்போன் பேசுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக செல்வது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த நிலையில் புதுச்சேரியில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாகிறது.

போக்குவரத்து விதியை மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வாகனம் ஓட்டுபவருக்கும், பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.