சென்னை WCC கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்துடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வெற்றி பெறுவதற்கு எந்த குறுக்கு வழியும் (Shortcut) கிடையாது; கடினமான உழைப்பு இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் சிகரத்தை எட்ட முடியும்” என்று மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற வசனமான “கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைப்பது நிலைக்காது” என்பதை மேற்கோள் காட்டி, உழைப்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக விளக்கினார்.
முதல்வரின் இந்த “ரஜினி ஸ்டைல்” பேச்சு அங்கிருந்த மாணவர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசிய முதல்வர், “தன்னைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான், ஆனால் பெண்களுக்கு உண்மையான அழகு என்பது அவர்களின் அறிவுதான்” என்று மிகச் சிறந்த கருத்தைப் பதிவு செய்தார்.
வெளித்தோற்றத்தை விட கல்வி மற்றும் அறிவே பெண்களைத் துணிச்சலோடு வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று அவர் அறிவுரை வழங்கினார். அரசியலைத் தாண்டி ஒரு தந்தையாகவும், வழிகாட்டியாகவும் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட இந்த நெகிழ்ச்சியான கருத்துகள் இப்போது இணையதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.
