2023- 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் திரிபுரா மாநில நிதி அமைச்சர் ரஞ்சித் சிங் ராய் தாக்கல் செய்தார். இதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டது .அந்தவகையில்  மந்திரி விளையாட்டு மேம்பாட்டு திட்டம், சாதனையாளர்களுக்கான ஊக்கத்தொகை, தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, மெயின் விதை உற்பத்தி அதிகரிப்பதற்கான முயற்சி போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக வருடத்திற்கு சுமார் ரூபாய் 589 கோடி அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பில் அதிகமாக மதிப்பெண் பெற்ற முதல் 100 மாணவிகளுக்கு  ஸ்கூட்டர் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.