சத்தீஸ்கர் மாநிலத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது. நேற்று தெலுங்கானாவில் பெண்களுக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் மதிப்பில் ஆன பலன்களை கொடுப்போம் என்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். இதனால் இந்த தேர்தல் பெண்களை மையப்படுத்திய தேர்தலாக மாறி உள்ளது. மகளிர் நல அறிவிப்புகளை வாரி வழங்குகின்றனர் அரசியல் கட்சிகள்.