தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் என்ற உத்தரவிட்டார். அதே சமயம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற தகுதியானவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குடும்ப அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண், புகைப்படம், வயது, மாவட்டம், தொழில், வாடகை வீடா அல்லது சொந்த வீடா, நிலம் வைத்திருப்பவரா, வாகனம் வைத்து உள்ளவரா, வங்கி கணக்கு மற்றும் உறுதிமொழி ஆகியவை வழங்க வேண்டும் என கூறப்படுகிறது.