மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற பயனாளிகளுக்கான தகுதி என்னெவென்றால், 5 ஏக்கர் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பெண் எம்எல்ஏ, பெண் எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், உச்ச வரம்பு ஏதுமில்லை ஏன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது, என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 1) குடும்ப அட்டை எண், 2) ஆதார் எண், 3)தொலைபேசி எண், 4) புகைப்படம், 5) வயது, 6) மாவட்டம், 7) தொழில், 8) வாடகை வீடா? சொந்த வீடா? 9) நிலம் வைத்திருப்பவரா?, 10) வாகனம் வைத்து உள்ளவரா, 11) வங்கி கணக்கு 12) உறுதிமொழி ஆகியவை வழங்கவேண்டும்