கோவையில் பல இடங்களில் சாலைகளில் வேக அளவீடு கருவிகளை பொறுத்தமாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்த முறை சென்னையில் பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்  இதற்காக ஸ்பீடு ரேடார் கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தானியங்கி முறையில் வழக்குபதிவு செய்யப்படும் எனவும்  காவல் ஆணையர்  அறிவித்திருந்தார்.  பின்னர் காவல்துறை இந்த அறிவிப்பை திரும்பபெற்றது குறிப்பிடத்தக்கது.