பெட்ரோல்-டீசல் அதிக விலைக்கு ஏறி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கிட்டத்தட்ட அதே விலையிலேயே இருக்கிறது. எனினும் தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க போகிறது.

நடப்பு ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆகஸ்ட் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 4-5 ரூபாய் வரை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் OMC-களின் இருப்பு நிலைகள் பெருமளவில் நெறிப்படுத்தப்பட்டு வலுவான லாபத்தை ஈட்டக்கூடும். இருந்தாலும் காலக்கெடு மற்றும் சாத்தியமான அளவு போன்றவை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இவை கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் நிலையை பொறுத்தது.