க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.30,000 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் தெரிவித்து உள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் க்ருஹ லக்ஷ்மி திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ஜூன் 16ம் தேதி முதல் பெறப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்தது.

சக்திபவனில் சேவா சிந்து போர்ட்டலை முதலைமச்சர் சித்தராமையா துவங்கி வைத்தார். பயனாளிகள் விண்ணப்பங்களை தற்போதே சமர்ப்பிக்கலாம். க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் பயனர்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். பிபிஎல் மற்றும் அந்த்யோதயா அட்டை வைத்திருப்போர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதாவது, சேவா சிந்து போர்ட்டல், பெங்களூரு ஒன், கர்நாடகா ஒன் மற்றும் கிராம ஒன் மையங்களில் அவர்கள் விண்ணப்பங்களை இலவசம் ஆக சமர்ப்பிக்கலாம். இதற்கிடையில் வரி செலுத்துவோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கூறப்படுகிறது.