சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மேலும் உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையால் பெட்ரோலிய நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

​இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மீதான அடுத்தகட்ட விலை உயர்வு மிக விரைவில் அமலுக்கு வரும் என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.