இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் ரஞ்சிக்கோப்பை ஒரு முக்கியமான தொடர். இந்த தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடியவர் சுவோஜித் பானர்ஜி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே போட்டியின் மூலம் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். இவர் ரஞ்சி கோப்பையில் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இவருக்கு 39 வயது ஆகும் நிலையில் தற்போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். மேலும் சமீப காலமாக நாட்டில் இளம் வயதினர் மாரடை பாலு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
