பொதுவாகவே அனைத்து சமையல்களிலும் முக்கியத்துவம் பெறுவது பூண்டு. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயோடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. வைட்டமின் சி நிறைந்த பூண்டு காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். பல நோய்களுக்கு தீர்வாக அமையும் பூண்டை நீண்ட நாட்கள் எப்படி கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைப்பது என்பது குறித்து எதிர்பார்க்கலாம். அதாவது பொதுவாக பூண்டை உணர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் இருந்து தவிர்த்து நல்ல காற்றோட்டத்துடன் கூடிய உலர்ந்த இடத்தில் சேமிக்கலாம்.

மறந்தும் கூட பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடக்கூடாது. ஏனென்றால் அதன் சுவையில் மாற்றம் ஏற்படுவதோடு பூண்டு முளை விடவும் ஆரம்பிக்கும். இதனால் அதில் உள்ள மூலக்கூறுகள் மாற்றமடைந்து இதன் இயல்பு தன்மை பாதிக்கப்படும். காம்புகளை அகற்றாமல் பூண்டை ஒரு பேப்பரில் இறுக்கமாக கட்டி அறை வெப்ப நிலையில் வைத்தால் அது ஆறு மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். காம்புகளை நீக்கினால் அதில் அதிக காற்று உள்ளே புகுந்து பூண்டு சுருங்க ஆரம்பிக்கும். இதனால் காம்பு நீக்கிய பூண்டை ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிடலாம்.