இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையி  பாஸ்வேர்ட் வைக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பல்வேறு கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்ட் வைக்க கூடாது. ஆன்லைனில் வேலை முடிந்தவுடன் லாக் அவுட் செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும். பாஸ்வேர்டில் பெரிய எழுத்து, எண்கள் மற்றும் குறியீடுகள் இருப்பது அவசியம். முடிந்தவரை மற்றவர்கள் யூகிக்க முடியாத பாஸ்வேர்டை வைப்பது நல்லது.