ஜியோவின் வெளியிட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் டேட்டாவை ரூ.5க்கும் குறைவான விலையில் பயன்படுத்த முடியும்.  395 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 5 ரூபாய்க்கும் குறைவான விலையில் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெற முடியும்.

ஜியோவின் ரூ.395 திட்டத்தோடு ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து  5ஜி ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால், ஜியோவின் வெல்கம் 5ஜி சலுகையின் பலனையும் பெறலாம் இந்த சலுகையின் கீழ், இதில் செல்லுபடியாகும் வரை பயனர்கள் அன்லிமிடெட் 5G சேவையைப் பயன்படுத்துவார்கள்.