புவி வெப்பமடைவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து வடிவமைக்கப்பட்ட ஆடைகளை இளம் பெண்கள் அணிந்து சாதனை நிகழ்த்தினர்.

பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகளை அணிந்தவாறு ஒய்யாரமாக வலம் வந்து இளம் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தனியார் உலக சாதனை அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.