சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும் எனவும் இதன் மூலமாக சிம்கார்டு மோசடியை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் மொபைல் மூலம் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.