
நோய்களில் கொடுமையான புற்றுநோயை குணப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதார த்துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குனர் “புற்றுநோய்க்கு எதிராக mRNA அடிப்படையில் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறோம். இது மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பரிசோதனை சமயத்தில் இந்த தடுப்பூசியானது புற்றுநோய் பரவுவதை தடுத்து புற்றுநோய் வளர்ச்சியையும் தடுத்தது என்று ஆராய்ச்சி மைய இயக்குனர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.