நடிகர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 அன்று  வெளியானது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு 60 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம் 3600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து ரஜினி, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத்துக்கு சொகுசு காரை பரிசளித்த சன் பிக்ச்சர்ஸ், மருத்துவ நன்கொடையையும் செய்து வருகிறது.