தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை போல சினிமா துறையில் கால் பதிக்க இருக்கிறார். ஆனால் நடிகராக இல்லாமல் ஒரு இயக்குனராக களம் இறங்க உள்ளார். இது பலருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக அவர் அயல்நாட்டில் பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சியாகி தற்போது ஒரு இயக்குனராக களம் காண இருக்கிறார். இவருடைய முதல் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தான் தயாரிக்க இருக்கிறது..

ஆனால் இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் யார் என்பதை பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் விஜய் சேதுபதி தான் சஞ்சய் படத்தில் நடிக்க இருப்பதாக கூறி வருகிறார்கள். ஏனென்றால் விஜய் சேதுபதி தான் சஞ்சய்க்கு பிடித்தமான நடிகர் என்று பலமுறை அவரே சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் சஞ்சய்க்கு சிறு வயதில் எந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும் என்று விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதாவது நண்பன் படத்தில் விஜய் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடித்தார். அப்போது இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்றபோது என் பையனுக்கு ஜீவாவை ரொம்ப பிடிக்கும் என அவரை ஒரு முறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.