மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் நேற்று  ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், நடிகை நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு, சுனில் குரோவர், சிமர்ஜீத் சிங் நாக்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில், அனிருத்-அட்லீ ஆகிய இருவரும் பூரிப்படைந்து கட்டிபுடிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.