அமெரிக்காவை சேர்ந்த ஆரோன் – அலினா தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான எம்மா லூக்கேமியா எனும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அவர் இன்னும் சில நாட்கள் தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்ற கேட்டுள்ளனர்.

அப்போது எம்மா தான் சிறுவயதிலிருந்து காதலித்து வரும் டேனியல் மார்சலை திருமணம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். இதையைடுத்து மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைத்த பெற்றோர் சிறுவனின் பெற்றோரிடம் சம்மதம் பெற்று கடந்த ஜூன் 29ஆம் தேதி திருமணத்தை நடத்தியுள்ளனர். திருமணம் முடிந்து 12 நாட்கள் கழித்து அம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.