இந்தியாவில் மாநில அரசு சார்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் அரசு ஒரு புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட உள்ளது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் 2750 ஊதியமாக வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் புற்றுநோய் நிலை குறித்த சான்றிதழை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இதற்காக அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் அமல்படுத்தப்படாது, நோயின் மூன்று மற்றும் நான்காவது நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தில் பயன் அடைய விரும்பும் நபரின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட மாட்டாது எனவும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ள நபர்கள் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றி அவற்றை சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.