நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த  ஜன்தன் திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை மக்களுக்கு வங்கிகள் வழங்கி வருகின்றன. கணக்கைத் தொடங்கி 6 மாத காலத்தில் 210,000 ஓவர் டிராஃப்ட் எடுக்கும் வசதியை பயனர்கள் பெறுகின்றனர். இதன் மூலம் வங்கியில் சுத்தமாக பணமே இல்லாவிட்டாலும் நீங்கள் ச10,000 எடுக்கலாம். வங்கி இதற்கு ஒரு கணிசமான வட்டியை வசூலித்துக் கொள்ளும் (உதாரணம் -12%)