மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் கிடைக்கும் படியான திட்டங்களை மத்திய நிதி அமைச்சகம் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு மத்திய அரசு குழுவை நியமித்துள்ள நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் புத்திரவாதமான வருமானம் வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகின்றது. இந்த புதிய மாற்றங்களை மாநில அரசுகள் ஏற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.