இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி ஸ்மார்ட் போன் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு இன்றைய நிலைமை மாறிவிட்டது என்று கூறலாம். இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளில் 3.15 மணி நேரம் சமூக வலைத்தளங்களுக்காகவும் 46 நிமிடங்களை ஆன்லைன் விளையாட்டு களுக்காகவும் 44 நிமிடங்களை ஓடிடி தளங்களிலும் செலவிடுவதாக டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மேலும் 89 சதவீதம் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 60 கோடி பேரும் சீனாவில் 100 கோடிக்கும் மேற்பட்டோரும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வருவதாக ஆய்வு அறிக்கை கூறுகின்றது.