உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடலைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், முறையான வழிகாட்டல் இல்லாமல் விசித்திரமான டயட் முறைகளை அவர்கள் பின்பற்றுவது பெரும் ஆபத்தாக முடிகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இந்திய இளைஞர் ஒருவர் ஜிம்முக்குள் ‘லெக் பிரஸ்’ (Leg-press) பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, அருகில் வைத்திருந்த ‘பெடிகிரி’ (Pedigree) எனப்படும் நாய் உணவை எடுத்துச் சாப்பிடுகிறார். அதில் புரதம் அதிகமாக இருப்பதாகக் கருதி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
What’s really happening at the gyms lately? Take a closer look at the supplements people are using and the results they’re chasing. Are these products boosting performance and health, or just fueling unrealistic expectations? pic.twitter.com/WP5qItdLXF
— Dr. CZ (@AngelMD1103) January 19, 2026
இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்டர் சி.இசட், “ஜிம்மில் என்னதான் நடக்கிறது? எதை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்?” எனத் தனது எக்ஸ் தளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். நாய் உணவுகள் நாய்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுபவை. மனிதர்கள் அதைச் சாப்பிடும்போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் ஊட்டச்சத்து மாற்றங்களால் உயிருக்கே ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. “புரதத்திற்கு முட்டை, சிக்கன் மற்றும் பால் பொருட்கள் இருக்கும்போது, இப்படி உயிரைப் பணையம் வைத்து நாய் உணவைச் சாப்பிடுவது மிகப்பெரிய அறியாமை” என நெட்டிசன்கள் அந்த இளைஞரை வறுத்து எடுத்து வருகின்றனர்.
