சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில மிரளவைக்கும் வீடியோக்கள் வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்போரை உறைந்துபோகச் செய்துள்ளது. மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வேட்டையாடுவதில் வல்லமையான ஒரு சிறுத்தையை, இரண்டு நபர்கள் மிக லாவகமாக எதிர்கொண்டு வெறும் கைகளாலேயே கீழே தள்ளி அடக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை போன்ற ஒரு கொடிய விலங்கை எதிர்கொள்ளும்போது பொதுவாக மனிதர்கள் அச்சத்தில் உறைந்துவிடுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் உள்ள நபர்கள் எவ்வித பயமுமின்றி, ஒரு திட்டமிடப்பட்ட வியூகத்துடன் செயல்பட்டு அந்தச் சிறுத்தையைச் சில நொடிகளில் செயலிழக்கச் செய்கின்றனர்.
ये वीडियो देखकर चिता समाज पर क्या बीतेगी🙂 pic.twitter.com/RnftAaTP6Q
— Devyani Chauhan (@ChauhanDevyani7) December 24, 2025
“>
இந்த வீடியோ தற்போது ‘டெய்லிஹன்ட்’ மற்றும் ‘டிவி9 பாரத்வர்ஷ்’ போன்ற தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர்களது துணிச்சலை பாராட்டுவதா அல்லது அதிர்ஷ்டத்தை வியப்பதா?” என வியந்து கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.
