சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தனது அசாத்திய வேகத்தால் ரூபிக் கியூப் (Rubik’s Cube) விளையாட்டில் புதிய உலக சாதனையைப் படைத்து ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், அந்தச் சிறுவன் மேடையில் அமைதியாக அமர்ந்திருக்கிறான். அவன் முன்னால் 2×2 வகை ரூபிக் கியூப் மற்றும் நேரத்தைக் கணக்கிடும் கருவி (Timer) உள்ளது. கருவி இயங்கத் தொடங்கிய அடுத்த கணமே, சிறுவனின் விரல்கள் மின்னல் வேகத்தில் சுழல்கின்றன. வெறும் 0.39 வினாடிகளில் அந்த ரூபிக் கியூப்-ஐ முழுமையாகத் தீர்த்து, புதிய உலக சாதனையைப் படைத்துள்ளான்.

 

View this post on Instagram

 

A post shared by Global Echo (@global_echo_)

சிறுவனின் விரல் அசைவுகள் எவ்வளவு வேகமாக இருந்ததென்றால், அங்கிருந்த கேமராக்களால்கூட அதன் நுணுக்கங்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க முடியவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “இது மனிதக் கைகளா அல்லது இயந்திரமா?” என்று வியந்து பாராட்டி வருகின்றனர். பலர் இந்த வீடியோவை ‘ஸ்லோ மோஷன்’  முறையில் பார்த்தும், சிறுவனின் வேகத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

ரூபிக் கியூப்-ஐ அதிவேகமாகத் தீர்க்கும் கலை ‘ஸ்பீட்கியூபிங்’ (Speedcubing) என்று அழைக்கப்படுகிறது. இது வெறும் கைவேலை மட்டுமல்ல, மூளையின் அதிவேகச் செயல்பாடு மற்றும் வடிவங்களை நொடிப் பொழுதில் கண்டறியும் திறனை உள்ளடக்கியது. 2×2 ரூபிக் கியூப் சிறியதாகத் தெரிந்தாலும், அதை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் தீர்ப்பது என்பது பல ஆண்டுகால தீவிரப் பயிற்சி மற்றும் கடின உழைப்பால் மட்டுமே சாத்தியமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரணமாக மக்கள் ஒரு கியூப்-ஐ தீர்க்க பல நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்தச் சிறுவன் செய்துள்ள சாதனை ஒரு ‘அதிசயம்’ என்றே கருதப்படுகிறது. தற்போது இந்தச் சிறுவன் சமூக வலைதளங்களில் ‘சூப்பர் கிட்’ என்று கொண்டாடப்பட்டு வருகிறான்.