கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, ஜிடி நாயுடுவின் பெயரிடப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்த மேம்பாலம் அருகே இன்று (அக்.13) அதிகாலை ஒரு கோர விபத்து நிகழ்ந்தது.
பாலத்தில் இருந்து இறங்கிய ஒரு கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை மோதியதில், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது
