நாடாளுமன்றத்தில் நேற்று மழை கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் புதிதாக வேலையில் சேர்வதற்கு பலனளிக்கும் விதமாக 3 திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் திட்டத்தில் மாத ஊதியமானது 3 தவணைகளாக வழங்கப்படும். அதாவது 3 மாதங்களுக்கு ரூ.15,000-க்கும் மிகாமல் வழங்கப்படும். அதன்பிறகு இரண்டாவது திட்டத்தின்படி இபிஎப் பங்களிப்பாக மாதம் ரூ.3000 வரை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மேலும் 3-வது திட்டத்தின் படி புதிதாக வேலையில் சேர்ந்தோர் மற்றும் அவர்களை வேலையில் அமர்த்தியோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.