உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலை வல்லுனரான ஈடன் பெர்நாத் உடன் சேர்ந்து ரொட்டிகளை சமைத்துள்ளார். இதுகுறித்து பில்கேட்ஸ் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது, “எனக்கு மிகவும் பிடித்த சமையல் கலைஞரான ஐடனுடன் சேர்ந்து இந்திய ரொட்டிகளை சமைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்”.

அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவில் இசையமைப்பாளரும் பாடகருமான முகமது ரஃபீக் பாடலை பின்னணி இசையாக பில் கேட்ஸ் சேர்த்திருக்கின்றார். ஈடனுடன் சேர்ந்து மாவு பிசையும் பில்கேட்ஸ் சப்பாத்தி கட்டை வைத்து சப்பாத்தி உருட்டி அதனை சுடுகிறார். அதன் பின் ஈடனிடம் கூறுவதைப் போல் சமையல் படத்திற்கு நன்றி என்ற வரியை இணைத்திருக்கின்றார். இந்த வீடியோவிற்கு சமையல் கலைஞர் ஈடன் “சமையல்காரருக்கு சேர வேண்டிய ரசீதுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. மீண்டும் உங்களுடன் சேர்ந்து சமைக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என பதில் அளித்துள்ளார்.