டி 20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் போட்டியிட்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்ததாகும். இதை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகிய இருவரும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் வெற்றி பெற்ற டி20 உலக கோப்பையை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் தற்போது இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரல் ஆகிப் பகிரப்பட்டு வருகிறது.