வெனிசுலா நாட்டில் டேனிலா லாரியல் என்னும் தடகள வீராங்கனை வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் ஓட்ட பந்தய வீரர் ஆவார். அதோடு 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி டேனிலா வீட்டிற்கு நேரடியாக சென்ற அதிகாரிகள் அங்கு அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியாயினர்.
இதைத்தொடர்ந்து இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் டேனிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினரின் விசாரணையில் ஆகஸ்ட் 11 அன்று டேனிலா உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட திடீர் மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் டேனிலா லாரியல் இறந்து போன செய்தியை வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டி தங்களது x வலைதளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியது.
