தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் பிளாக்கில் டிக்கெட் எடுத்து லியோ படத்தை பார்க்க வேண்டாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

அன்றாட வேலைகளுக்கு நடுவே பொழுதுபோக்கிற்காக பார்க்கும் படத்திற்கு பெரிய செலவையும் முக்கியத்துவத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறிய அவர் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக காத்திருந்து அடுத்தடுத்த காட்சிகளில் பார்க்க முயற்சி செய்யவும் என்று கூறியுள்ளார்.