தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான புதிய கட்டுப்பாடுகளை தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு நடைபெற உள்ள அனைத்து தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டிய உரிய அறிவுரைகள் அனைத்தையும் முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இந்த தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும் எனவும் தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி பாட ஆசிரியர்களை தேர்வு வரை கண்காணிப்பாளர்களாக நியமிக்க கூடாது. ஒவ்வொரு தேர்வு வரைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். தேர்வர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேவர்கள் வினாத்தாள் புத்தகத்தில் விடைகளை குறிக்க வேண்டாம் என்றும் வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் மட்டுமே விடைகளை குறிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் 1500 மாணவர்கள் செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.