தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கடைகளில் கைரேகை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் நாட்களில் கருவிழி மூலமாக ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான பணியில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்கள் ரேஷன் பொருள்களை பெறுவதற்கு குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் ரேஷன் கடைக்கு வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் வரவேண்டும் என தவறுதலாக கூறப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும் என்றும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை ரேஷன் கார்டில் புதுப்பிக்க தனியாக முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.