இஸ்ரேல் காசா இது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி பெண்களும் குழந்தைகளும் ஆவார். இதனை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் ஒரு தந்தையின் சொல்ல முடியாத துயரம் குறித்த வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதாவது மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா என்ற பகுதியில் முகமது அபு அல்-கும்சான் என்பவர் வசித்து வருகிறார்.

இவருடைய மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பாக அழகிய இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் இவர் தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக வெளியே சென்றார். ஆனால் அவர் வீடு திரும்புவதற்குள் மனைவியும் குழந்தைகளும் வீட்டில் பிணமாக கிடந்தனர். அதாவது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் அவர் பிறப்பு சான்றிதழை வைத்துக்கொண்டு கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய காண்போரை கலங்க வைத்துள்ளது.