ஹாலிவுட் சினிமாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிரெண்ட்ஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் மேத்யூ. இவருக்கு 54 வயது ஆன நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருடைய வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்து மர்மமான முறையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கொலைக்கான காரணமும் காரணமானவர்கள் குறித்தும் தெரிய வந்துள்ளது. அதாவது மேத்யூவுக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது. அதாவது அவருக்கு மனநலன் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததால் அதற்காக கேட்டமைன் மருந்து எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த மருந்துக்கு அவர் அடிமையாகி விட்டார்.
இதனை பயன்படுத்தி அவருடைய உதவியாளர் 2 மருத்துவர்கள் உதவியுடன் அவருக்கு அளவுக்கு அதிகமான கேட்டமைன் வழங்கி உள்ளார். இதன் மூலம் மேத்யூவிடம் இருந்து அவர் பணம் பறித்துள்ளார். இந்நிலையில் தற்போது உதவியாளர், மருத்துவர்கள் உட்பட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கிய குற்றவாளி ஜாஸ்வீன் சங்கா (41). இவர் கேட்டமைன் போதைப் பொருள் ராணி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் பணக்காரர்கள் வாழும் இடங்களில் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார். இவர்தான் அதிக அளவிலான கேட்டமைனை மேத்யூவுக்கு கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளார். மேலும் இவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
