இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பதற்கு பஞ்சமே இல்லை. திரும்பின பக்கம் எல்லாம் ஏதாவது ஒரு மோசடி செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் இதனை அறிந்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றிய ஒரு மோசடி நபர் சிக்கி உள்ளார். சீனாவில் உள்ள புத்த கோவிலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோவிலில் உள்ள உண்டியலில் ஒருவர் தனது வங்கி கணக்கின் qr குறியீடு ஒட்டி உள்ளார். பக்தர்கள் அதனை ஸ்கேன் செய்து காணிக்கை செலுத்தி வந்துள்ளனர். இதனால் மோசடி செய்தவரின் கணக்கில் 3.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்து பணத்தை மீட்டு உள்ளனர். மேலும் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
