மனிதநேயம் எங்கே போனது என்பதைக் கேட்க வைத்திருக்கும் கொடூரம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெய்திபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கௌஹர்வார் கிராமம் அருகே, பிறந்து 10 நாட்கள் ஆன பெண் குழந்தை, உயிருடன் வயல்வெளியில் புதைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிலர், அருகில் இருந்து கேட்கப்பட்ட அழுகை சத்தத்தைத் தொடர்ந்து, அங்கு சென்றனர். அங்கு சென்ற அவர்கள், மண்ணின் கீழ் புதைந்த நிலையில், ஒரு சகுழந்தையின் கை வெளியே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் குழியை தோண்டு, குழந்தையை உயிருடன் மீட்டு, காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர். ஜெய்திபூர் சமூக சுகாதார மையத்தில் (CHC) சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு பணியாற்றும் மருத்துவர் நிதின் சிங் கூறியதாவது:
“காலை 10:30 மணிக்கு குழந்தைமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தையின் உடலில் சேறு, காயங்கள், மற்றும் கையில் குரோமைட் போன்ற பொருட்கள் காணப்பட்டன. உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. பின்பு, குழந்தையின் நிலைமை சீராக உள்ளதால், சிறந்த சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது,” என்றார்.
மேலும் குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக இத்தகைய கொடூரம் நடந்தது என்பது குறித்து எந்தவிதமான உறுதி செய்யப்பட்ட தகவலும் இல்லை. ஜெய்திபூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
