உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், கணவனைக் கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசி, அதை ஒரு விபத்து போல மாற்ற முயன்ற மனைவி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை, நிச்லாவ்ல்–சிந்துரி சாலையில், ராஜபரி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்வர் ரௌனியர் (26) என்பவரின் சடலம் கிடந்தது. முன்னதாக, அவரது தந்தை கேசவ் ராஜ், வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு நாகேஷ்வர் வீட்டை விட்டு பைக்கில் புறப்பட்டுவிட்டார் என்றும், பின்னர் வீடு திரும்பவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அடுத்த நாள் காலை அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் இது விபத்தாகவே தெரிய வந்தாலும், பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்த காயங்கள், உடலுறுப்பு வெளிப்பாடு, மற்றும் உடை இல்லாத நிலை போன்றவை போலீசாருக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தின. அந்த தகவல்களின் அடிப்படையில் அவரது மனைவி நேஹா, மற்றும் அவரது காதலன் ஜிதேந்திரா மீது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இருவரும் மது கொடுத்து திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

விசாரணையின் போது, நேஹா தெரிவித்ததாவது: நாகேஷ்வருடன் வாழ விரும்பவில்லை. அவர் எனது வாழ்க்கையை நரகமாக மாற்றினார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்தபோதும், அவர் என் மீது கட்டுப்பாடு செலுத்த முயன்றார். தினசரி சண்டை, கூச்சல். இதிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக, ஜிதேந்திராவுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டோம்.”

பொதுவாகவே, நேஹா மற்றும் நாகேஷ்வர் ஒரு காலத்தில் காதல் திருமணம் செய்தவர்களாக இருந்தனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தின் நவல்பராசி மாவட்டத்தைச் சேர்ந்த நேஹாவை, நாகேஷ்வர் மணந்தார். இவர்களுக்கு ஆத்விக் என்ற மகன் உள்ளார். கொலை நடந்த நாள், நேஹா நாகேஷ்வரை பிஷ்மில் நகருக்கு அழைத்து, பீர் அருந்தச் செய்தார். இருவரும் மது அருந்திய பின் தூங்கினர். தூங்கி விட்ட நாகேஷ்வரின் கால்களை துப்பட்டாவால் கட்டி, வெளியே காத்திருந்த ஜிதேந்திராவை உள்ளே அழைத்தார். முதலில் நேஹா கழுத்தை நெரித்தார், பின்னர் ஜிதேந்திரா குத்திக் கொன்றார்.

கொலை முடிந்த பின், உடை அனைத்தையும் கழற்றி, சடலத்தை பைக்கில் உட்கார வைத்து, சந்தேகம் எழாமல் சிந்துரியா சாலையின் ஓரத்தில் சுமாராக 25 கி.மீ தொலைவில் வீசியுள்ளனர். ஜெய்திபூர் காவல் நிலைய போலீசார், இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் முழு குற்றத்தையும் ஒப்புக்கொண்டனர். நேஹா கடந்த ஆண்டு முதல் ஜிதேந்திராவுடன் உறவு வைத்திருந்தார் என்றும், கணவனின் எதிர்ப்பால் அவரைக் கொல்வதற்கே திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

நாகேஷ்வர், நேபாளம் வரையிலான சர்வதேச வேலைக்காக தொடர்ந்து பயணிப்பவர். இவரது கணவன்-மனைவி உறவு பல மாதங்களுக்கு முன்பே மோசமடைந்தது. நாகேஷ்வர் ஒரு காலத்தில் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரும் ஆவார். சிறையில் இருக்கும் போதே, நேஹா – ஜிதேந்திரா உறவு ஆரம்பமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது ஒரு தீவிரமான குற்றச்செயலாகும். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.