பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தான் வீட்டை காலி செய்த பிறகு தனது வீட்டு உரிமையாளர் நடந்து கொண்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ஆதங்கம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் டெபாசிட் பணத்துக்கு ஆப்புதொடக்கத்தில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் அளவிற்கு மிகவும் நெருக்கமாகவும், நண்பரைப் போலவும் பழகிய அந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்தவுடன் ‘ஐநா சபையின் தணிக்கையாளர்’ போல மாறிவிட்டதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீட்டின் சுவர்களில் உள்ள சிறு கீறல்கள் முதல் மின்விசிறியில் படிந்துள்ள தூசி வரை அனைத்தையும் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதற்காக பெரும் தொகையை டெபாசிட் பணத்திலிருந்து பிடித்தம் செய்ததே இந்த அதிருப்திக்குக் காரணமாகும்.

இதனால் வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகப்படியான தொகையைச் சேதக் கட்டணமாகக் கோருவது மற்றும் தேவையற்ற காரணங்களைச் சொல்லி டெபாசிட் பணத்தைத் தராமல் இழுத்தடிப்பது பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சாதாரணமாகிவிட்டதா என்று அந்த இளைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவு வெளியான சில நேரங்களிலேயே பலரும் தங்களுக்கு நேர்ந்த இதே போன்ற கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். நண்பரைப் போலப் பழகினாலும் பண விஷயத்தில் வீட்டு உரிமையாளர்கள் காட்டும் இந்த கெடுபிடி பல வாடகைதாரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.