பிரேசிலில் டைனோசர் ஒன்றின் கால் தடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலில் உள்ள அரகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கால் தடத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அது பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய வகை டைனோசர் என கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு முதல் மூன்று அடி வரை உயரம் கொண்ட இந்த வகை டைனோசர் மாமிச விலங்கு என்றும் இது 12.5 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.