காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் ஹரியானா வாக்காளர் மோசடி (வோட் சோரி) குறித்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘போலி வாக்காளர் அடையாள அட்டைக்கான சான்றாக’ பயன்படுத்தப்பட்ட தனது பழைய புகைப்படம் தொடர்பாக, பிரேசிலிய மாடல் அழகி லாரிசா என்பவர் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட லாரிசா, இந்தியாவில் ‘சில தேர்தல் மோசடிகளுக்கு’ தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டதில் தனக்குள்ள அவநம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார். முதலில் ஒரு இலவச ஸ்டாக் புகைப்பட தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்தப் படம், வெவ்வேறு பெயர்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட போலி வாக்காளர் அடையாளங்களுக்கான “சான்று” என்று ராகுல் காந்தியால் விவரிக்கப்பட்டிருந்தது.
The name of the Brazilian Model seen in @RahulGandhi‘s press conference is Larissa. Here’s her reaction after her old photograph went viral. pic.twitter.com/K4xSibA2OP
— Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025
“>
இதுகுறித்து லாரிசா பேசியதாவது: “நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு ஜோக் சொல்லப் போறேன். இது ரொம்பக் கொடுமையா இருக்கு! அவங்க என்னோட பழைய போட்டோவ பாக்குறாங்க. அது ரொம்பப் பழைய போட்டோ. நான் ரொம்பச் சின்னப் பொண்ணு , 18 அல்லது 20 வயசுல இருந்தேன். அவங்க என் போட்டோவ பாக்குறாங்க… எனக்குத் தெரியாது, இந்தியாவில் ஏதோ தேர்தல் அல்லது வாக்குப்பதிவு விஷயத்துக்கு. என்னை இந்தியனா காட்டறதால மக்களை ஏமாற்றுறாங்க, அதனால ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கிட்டு இருக்காங்க. இது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்னு பாருங்க! நான் என்ன ஒரு குழப்பத்துல இருக்கேன்!” என்று தனது கோபத்தையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், இது தொடர்பாக ஒரு நிருபர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
ராகுல் காந்தி, நவம்பர் 5ஆம் தேதி புது டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டினார். சுமார் 25 லட்சம் போலி வாக்குகள், அதாவது மொத்த வாக்குகளில் 12% பதிவானதாகவும், வாக்காளர் பட்டியலில் முறையான கையாளுதல் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒரே புகைப்படம் பல பெயர்களில் தோன்றிய ஒரு உதாரணத்தை ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார். இதில் பயன்படுத்தப்பட்ட லாரிசாவின் படம், புகைப்படக் கலைஞர் மேத்தியஸ் ஃபெரெரோவால் எடுக்கப்பட்டு, 2017இல் ஒரு இலவசப் பயன்பாட்டு உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
