
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகள் நாகஸ்ரீ வந்தனா பரிமளா 2022 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் இந்திய மாணவர்கள் பயணித்த கார் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் பரிமளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த காரில் பயணித்த நிஹித் மற்றும் பவன் ஆகிய இரண்டு மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரின் பிரேக் பிடிக்காதது தான் விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.