நடிகர் கமல்ஹாசன் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தன் 234-வது திரைப்படத்தில் நடிக்கபோகிறார். இதனிடையில் கமல் ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் டைரக்டர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “ப்ராஜெக்ட் கே”. இதில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார்.

மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவருக்கு பல கோடி சம்பளம் வழங்க இருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள்.