சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் மாவீரன் படத்தின் 2-வது பாடலான “வண்ணாரப்பேட்டையில” பாடல் 14ம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடி உள்ளனர். கடந்த வருடம் டைரக்டர் முத்தையா இயக்கத்தில் வெளியாகிய விருமன் படத்தில் அதிதி ஷங்கர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.