பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் மற்றும் இயக்குனர் ஓம்நாத் கூட்டணியில் உருவாகியுள்ள ஆதிபுரூஸ் திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு இருக்கை காலியாக விட பட குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் தெலுங்கானாவின் கம்மம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு ராமர் கோவிலுக்கும் 101 டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என ஸ்ரேயாஸ் ஊடக தலைவர் தெரிவித்தார். அதனைப் போலவே படக்குழு சார்பில் ஏழை மக்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.